• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 24 மணி நேரமும் இலவச முக கவசங்கள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கும் முகாம் திறப்பு !

May 10, 2021 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, 24 மணி நேரமும் இலவச முக கவசங்கள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கும் முகாம் கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி.1 மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் சார்பாக துவங்கப்பட்டது.

கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தினமும் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி பல்வேறு சிகிச்சை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து பரவி வரும் நிலையில், இ.எஸ்.ஐ.வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரம் இலவச முக கவசங்கள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்குவதற்கான முகாம் மருத்துவமனை முன்பாக துவங்கப்பட்டது. கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி.1 மாவட்ட மக்கள் தொடர்பாளர் அரிமா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்ட ஆளுநர் நடராஜன் முகாமை துவக்கி வைத்தார்.

இதில் நேரு நகர் அரிமா சங்க
பொருளாளர் ஹரீஷ்,மற்றும் சூரி நந்தகோபால், எஸ்.கே.எம்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்காநல்லூர் காவல் நிலையம், கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம்,F.O.P. அறக்கட்டளை மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் ஆகியோர் இணைந்து நடத்திய இதில், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முக கவசங்கள் மற்றும் கபசுர குடிநீர் ,சானிட்டைசர் வழங்க உள்ளதாக முகாம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.

துவக்க நிகழ்ச்சியில் ,சிங்கை ரவிச்சந்திரன், ஜனனி பேக்கரி மோகன்ராஜ்,கிருஷ்ணமூர்த்தி, பாலா,ஜெகந்நாதன், சுந்தர்ராஜ், கிரி,ரவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க