February 20, 2021
தண்டோரா குழு
கோவையில் 2300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அருள்பிரகாஷ் ஆகியோர்கள் கோவை to பாலக்காடு ரோடு JS அக்ரோ கம்பெனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியே வந்த பொலிரோ பிக்அப் வேன் மற்றும் அசோக் லைலாண்ட் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 56 ரேஷன் அரிசி மூட்டைகள்
இருந்தது தெரியவந்தது.
ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 50 கிலோ ரேஷன் அரிசி அடங்கிய சுமார் 2300 கிலோ ரேசன் அரிசியை கைப்பற்றி திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை விசாரணை செய்ததில் தானும் தப்பியோடிய தங்கபாண்டியும் கேரளா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவது விசாரணையில் தெரிய வந்தது.எனவே மேல் நடவடிக்கைக்காக மேற்படி அரிசி மூட்டைகள் மற்றும் எதிரியையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.