• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 23 நாட்களில் 13 ஆயிரம் பேர் கைது 13,146 வாகனங்கள் பறிமுதல் !

April 20, 2020 தண்டோரா குழு

144 தடை உத்தரவை மீறியதாக கோவையில் 23 நாட்களில் 13 ஆயிரம் பேர் கைது 13,146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும்144 தடை அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர தேவையின்றி வெளியே வருவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று 365 வழக்குகளில் 368 பேர் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து 246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் முகக் கவசம் அணியாமல் சென்றதாக 72 வாகனங்களில் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கோவையில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 11 ஆயிரத்து 957 வழக்கு பதிவு செய்யப்பட்டு. 12999 பேர் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து 13147 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க