October 20, 2021
தண்டோரா குழு
கோவையில் இரு வீடுகளில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சின்னியம்பாளையம் சின்னதோட்டம் தெருவை சேர்ந்தவர் கவிதா (45).
இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது மகளுடன் உடுமலைப்பேட்டையில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், 2 கிராம் தங்கம், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து கவிதா பீளமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சூலூர் கொங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பானுபிரியா (30). இவர் சம்பவத்தன்று சிங்காநல்லூரில் உள்ள உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றார். அங்கு பானுபிரியா 7 பவுன் தங்க நகைகளை கழட்டி பீரோவில் வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நகைகள் காணவில்லை. இது குறித்து பானுபிரியா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.