April 13, 2020
தண்டோரா குழு
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்ட நிலையில்
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவர்களுக்கு அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை செய்தபோது கொரோனா நோய்த்தொற்று உறுதி என ரிசல்ட் வந்துள்ளது.
இந்நிலையில், தற்போது தனிமைபடுத்தப்பட்டு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனிருந்த மற்ற மருத்துவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.