March 7, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உருவபடத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொழுத்தியும் கோவை வழக்கறிஞர்கள் இன்று(மார்ச் 7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக முகநூலில் கருத்தை பதிவிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நாளை மதவெறியர் ஈ.வே.ரா சிலையை உடைப்போம் என்ற தோனியில் பதிவிட்டார், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாசலில் எச்.ராஜா உருவ படத்தை செருப்பால் அடித்தும் தீயிட்டு கொழுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.