• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம்

November 23, 2019 தண்டோரா குழு

கோயம்புத்தூர் கிரிக்கெட் சங்கஎம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் சார்பில் புல்வெளி கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கிரிக்கெட் மைதானத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பீகார் கோப்பைக்கான போட்டிகள் நவம்பர் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர் கிரிக்கெட் சங்கம் நடத்தும் இப்போட்டியை அதன் தலைவர் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கிரிக்கெட்சங்கத்தின் இணைச் செயலாளர் கே.சங்கர் துணைச் செயலாளர் வெங்கடராமன் பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்டத்தில் முதன் முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட இந்த மைதானம் 73 மீட்டர் பரப்பளவில் தனித்தனி பெவிலியன் போட்டி நடுவர்கள் ஊழல் தடுப்பு அலுவலருக்கான வலை பயிற்சி செய்வதற்காக 6 வலை பயிற்சி இடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதே கோவை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க