March 25, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் கடந்த ஜனவரி 20-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பலர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரியும், பிழைகள் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆன்லைன் மூலமாகவும், நேரிடையாகவும் விண்ணப்பித்திருந்தனர்.
இதனிடையே வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 22ம் தேதி கோவை மாவட்ட துணை வாக்காளர் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டது.இதன்படி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 844 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பிடித்து உள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 492 பேர் வாக்காளர்கள் 18 முதல் 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் ஆவார்.
இந்த தேர்தலில் 15 லட்சத்து 19 ஆயிரத்து 27 ஆண் வாக்காளர்கள்,15 லட்சத்து 62 ஆயிரத்து 573 வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 428 பேர் என மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 பேர் வாக்களிக்க உள்ளனர்.