January 27, 2020
தண்டோரா குழு
கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் சுமார் அரை கிலோ தலைமுடி சேம்பு பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் பொருட்கள்
அகற்றப்பட்டன.
கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி பள்ளி படித்து வருகிறார். இவர் அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவை திருச்சி சாலையில் சிங்காநல்லூர் அருகே ராமநாதபுரம் அடுத்த பகுதியில் பிரபல விஜிஎம் மருத்துவமனை சென்று மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது உடலில் கட்டி போன்ற ஒரு வடிவம் இருப்பது தெரியவந்தது.
வயிற்றுப் பகுதியில் இருந்ததனால் அதனை உடனடியாக அகற்ற வேண்டுமென அறுவை சிகிச்சை நிபுணர் கோகுல் கிருபா சங்கர் மற்றும் அவருடைய மருத்துவ குழு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது. இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அச்சிறுமியின் வயிற்றுப் பகுதியை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொழுது அவரது வயிற்றில் தலை முடியும் ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களும் தென்பட்டன. தலைமுடி ஷாம்பு பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மருத்துவ குழுவால் வெற்றிகரமாக அகற்றப்பட்டன.
இது தொடர்பாக பேசிய அச்சிறுமிக்கு குடலியல் அறுவை சிகிச்சை செய்த மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் கோகுல் கிருபா சங்கர்,
தன் தாய்மாமன் இறந்த சூழ்நிலையில் செய்வதறியாது மனதளவில் குழம்பிப்போன அச்சிறுமி அவ்வப்போது தலைமுடி ஷாம்பு பாக்கெட் உள்ளிட்டவை உட்கொண்டுள்ளார்.ஆனாலும் அதனை பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. வயிற்றுவலியால் சந்திக்க வந்தபோதே அது தெரியவந்தது. கட்டிபோல் காட்சியளித்த நிலையில் அதனை உடனடியாக அகற்ற முடிவு செய்து பின்பு அறுவை சிகிச்சையின் பொழுது அது முடி என்று தெரிந்தது.
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த தலைமுடி பிளாஸ்டிக் பைகளை அகற்றபட்டு அச்சிறுமி நலமுடன் இருக்கிறார். ,சிறுவர்-சிறுமிகளை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்றார்.