• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 12 ஆயிரம் புத்தகங்களை கொண்டு கிறிஸ்துமஸ் மரம் செய்து உலக சாதனை

December 22, 2022 தண்டோரா குழு

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன்,மற்றும் எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளி யுவா கிளப் மாணவர்கள் 12 ஆயிரம் புத்தகங்களை கொண்டு 1.5 மணி நேரத்தில் 15 அடி உயர கிறிஸ்துமஸ் மர வடிவில் உருவாக்கி வெற்றிகரமாக உலக சாதனை படைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் உருவாக்கிய கிறிஸ்துமஸ் மரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளியில் நடைபெற்ற இந்த முயற்சியை புளோரிடாவின் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியனைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் மதிப்பீடு செய்தார். அதைத் தொடர்ந்து, பள்ளி யுவா கிளப் மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் நிறுவனர் சி.சிவநேசன், சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் இணை நிறுவனர் சசிகலா சத்தியமூர்த்தி மற்றும் சிர்ஸ்டோபர் டெய்லர் கிராப்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த முயற்சி குறித்து பேசிய சசிகலா சத்தியமூர்த்தி,

ஒவ்வொரு மாதமும் சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை ஒரு சமூகப் பணியை செய்கிறது.இந்த முயற்சி மாணவர்களிடையே புத்தகங்களை படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தும். இந்த கிறிஸ்துமஸ் மரம் போன்ற கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட 12,000 புத்தகங்களை சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் நூலகத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ்,கோவையில் உள்ள பல மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் நூலகங்களை அமைக்க அறக்கட்டளை திட்டமிட்டு, அடுத்த கல்வியாண்டில் தொடங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் படிக்க