• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 12 அடி உயர அய்யனார் சிலை முன்பாக பொங்கல் வைத்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்

January 9, 2020 தண்டோரா குழு

கோவை சுகுணா சர்வதேச பள்ளியில் 12 அடி உயர அய்யனார் சிலை முன்பாக பொங்கல் வைத்து மாணவ, மாணவிகள் கொண்டாடினர்.

கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா பண்டிகை தமிழ் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் சுகுணா மற்றும் நிறுவனர் லட்சுமி நாராயணசாமி,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் வளாகத்தில்கிராமத்து சூழ்நிலையில்,12 அடி உயர அய்யனார் சிலை வைத்து பின்னர் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து பொங்க மாணவிகள் குலவையிட்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து விழாவில் கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல்,நொண்டி, கண்ணா மூச்சி, பூப்பறிக்க வ௫கிறோம்,கிடுகிடு ஓட்டம் என நடைபெற்ற போட்டிகளில் பலர் கலந்துகொண்டனர்.மேலும் போட்டிகளுக்கு இடையே மாணவ,மாணவிகளின் ஒயிலாட்டம், கரகாட்டம்,கும்மி நடனங்களும் நடைபெற்றன.ஆடவர்களுக்கான உரிஅடித்தல் போட்டி உற்சாகத்துடன் கேளிக்கையுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாணவ,மாணவிகளுக்கு பொங்கலும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர் அந்தோணி ராஜ் முதல்வர் விஜயலட்சுமி, தலைமை ஆசிரியை அனிதா, பள்ளியின் பொறுப்பாளர் லட்சுமி ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க