• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது – தாயும் சேயும் நலம்

January 3, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே, 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது தாயும் சேயும் நலம்.

அன்னுார் அருகே கதவுகரையை சேர்ந்தவர் முருகசாமி, இவரது மனைவி அபர்ணா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் அபர்ணா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 1:15 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு சென்ற, 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அபர்ணாவை ஆம்புலன்ஸில் ஏற்றி, அன்னுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் பிரசவ வலி அதிகமானதால், அங்கேயே வாகனத்தை நிறுத்தி, அவசர மருத்துவ உதவியாளர் தனபால், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜசேகர் ஆகியோர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

தற்போது, தாயும், குழந்தையும் அன்னுார் அரசு மருத்துவமனையில் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெண் குழந்தை 2 கிலோ 300 கிராம் எடையுடன் நலமாக உள்ளது.ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு, தம்பதியின் உறவினர்கள், நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க