December 20, 2020
தண்டோரா குழு
கோவையில் 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
கோவை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் மற்றும் அம்மா சேவா அறக்கட்டளை, பெண்ணியம் அமைப்பு இணைந்து உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது .இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சாதனையாளர் விருது அரசு நலத்திட்ட உதவிகள் ,நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்,அம்மா சேவா அறக்கட்டளை நிறுவனர் சோனாலிபிரதீப் ,அனந்த கல்பனா பவுண்டேசன் நிறுவனர் ஈஸ்வரன்,சத்ரபதி சிவாஜி அறக்கட்டளை நிறுவனர் சரவணன்,மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.