• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

December 23, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

மாநிலம் முழுவதும் இன்று வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில் கோவையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராசாமணி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி கோவையில் 10 சட்டமன்ற தொகுதியில்
ஆண் வாக்காளர்கள் – 1448031 பேரும்,பெண் வாக்காளர்கள் – 1475461 பேரும், மாற்று பாலினத்தவர் – 345 பேர் என
மொத்த வாக்காளர் -29,23,837 உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைக் சந்தித்த ஆட்சியர் ராசாமணி,

01-01-2020 ஆம் தேதியைக் தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டதன் பேரில் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. 23 – 12 – 2019 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் படி கோவையில் 2923837 வாக்காளர்கள் உள்ளதாகவும், வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம் ,பெயர் நீக்கம் ஆகியவற்றிற்க்கு விண்ணப்பங்களைக் 23-12-2019 முதல் 22-01-2019 முடிய அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து வாக்குபதிவு மையங்கள் ,கோட்டாச்சியர் அலுவலகங்கள்,வட்டாச்சியர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை கொடுக்கலாம்..எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இறுதி வாக்களர் பட்டியல் 14.02.2020 அன்று வெளியிடப்படும். இதுவரை கோவையில் எங்கும் பணபறிமுதல்கள் ஏதும் இல்லை என்றும் பதட்டமான வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை எடுப்பவர்கள் இ- சேவை மையத்தைக் அனுகி அடையாள அட்டையைக் பெற்று கொள்ளலாம் என கூறிய அவர்,
இதுவரை கோவையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வீடுகளில் போஸ்டர் ஒட்டிய விதிமீறல் புகார் வந்துள்ளதாகவும் அது குறித்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க