February 6, 2021
தண்டோரா குழு
கோவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி 10 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி 32 மற்றும் 37-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 5 கோடி மதிப்பில் கொடிசியா சாலை, அவினாசி சாலை முதல், எஸ் பெண்ட் சாலை வரை மற்றும் குமுதம் நகர் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கும், சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 5 கோடி திட்ட மதிப்பில் விளாங்குறிச்சி சாலை, மகேஸ்வரி நகர் முதல் மாநகராட்சி எல்லை வரை, மற்றும் சேரன்மாநகர் பிரதான சாலையில் தார்சாலைகளை புதுப்பிக்கும் பணி களையும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் உட்பட துறை சார்ந்த அரசு அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டார்கள்.