• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஸ்மார்ட் சிட்டி இன்னொவேஷன் ஆய்வகம் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

September 11, 2017 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் (smart city innovation lab) ஆய்வகம் கோவையில் நிறுவ கோவை மாநகராட்சி சார்பில் ஜெர்மன் நாட்டின் பிரான்ஹோஃபர் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தலைமை செயலகத்தில் கையெழுத்திடப்பட்டது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி தேர்வுசெய்யப்பட்டதிலிருந்து மாநகராட்சி சார்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சியும்,ஜெர்மனி நாட்டின் ஸ்டுட்கார்ட் நகரிலுள்ளபிரான் ஹோஃபர் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுமையானகண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகம் (smart city innovation lab) நிறுவ தமிழக அரசு கடந்த ஜூலை 04-ம் தேதி அனுமதி வழங்கியது.

இதனைத்தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில், கோவை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயனும் ஜெர்மன் நாட்டின் ஸ்டுட்கார்ட் நகரிலுள்ள பிரான்ஹோஃபர் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அதன் இந்திய நாட்டின் இயக்குநர் ஆனந்தியும் ஆய்வகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஆய்வகம், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மற்றநகரங்களை பங்குபெற செய்வதுடன் ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், இந்திய – ஜெர்மனி ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம் கோவை மாநகரத்திற்கு மேலாண்மை, முதலீட்டுத் திட்டம் மற்றும்அலுவலர்களுக்கான பயிற்சி,திறன் வளர்ப்பு திட்டங்கள் மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர்ஹர்மந்தர் சிங், சென்னையில் உள்ள ஜெர்மன் நாட்டின் தூதுவர்அகிங் பேபிக் , நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க