• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியை முற்றுகையிட்ட அனைத்து கட்சியினர் கைது

July 26, 2019 தண்டோரா குழு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கட் ஆஃப் மதிப்பெண்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு முற்றுகையிட்ட அனைத்து கட்சியினரை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

இதுதொடர்பான செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன்,

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு தமிழக மக்கள் மற்றும் தமிழக எதிர்க் கட்சியினர் யாரும் ஏற்காத பட்சத்தில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய குமஸ்தா தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 28 மார்க் மட்டுமே எடுத்தால் தேர்ச்சி பெறலாம் என்று ஒதுக்கீடு வழங்கி உள்ளது . இது மற்ற 97 சதவீத மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே வங்கிகளில் 50 சதவீதத்திற்கு மேல் உயர்சாதியினர் பணிபுரிந்து வருகின்றனர்என்றார்.

இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட எஸ் டி பி ஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , புரட்சிகர இளைஞர் முன்னணி , திராவிட தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை , மே 17 இயக்கம் , தமிழர் விடியல் கட்சி, தமிழ் புலிகள், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர்.

மேலும் படிக்க