• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வ.உ.சிதம்பரனாரின் நகரும் புகைபட கண்காட்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

February 23, 2022 தண்டோரா குழு

கோவையில் வ.உ.சிதம்பரனாரின் நினைவுகளை பறைசாற்றும் விதமாக நகரும் புகைபட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் விதமாக நகரும் புகைப்பட கண்காட்சி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பஸ் இன்று கோவை வந்தடைந்தது. இதில் வ.உ.சி.யின் தியாகத்தையும், அவரது தீர வரலாற்றையும் மாணவ- மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள புகைப்படங்கள் இந்த பஸ்சில் வைக்கப்பட்டு உள்ளன.இதனை பார்வையிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் நிறுத்தப்பட்டு இந்த கண்காட்சி பஸ்சை பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் பார்வையிட உள்ளனர்.

மேலும் படிக்க