May 23, 2021
தண்டோரா குழு
கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு விதிகளிலிலும் வேப்பிலை தோரணம் கட்டி சித்த மருத்துவ நீர் தெளித்து கொரோனா கிருமியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாரத மாதா நற்பணி அறக்கட்டளையினர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்று கோவையில் அதிகம் பரவி வருவதால் இதனை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதில் சித்த மூலிகை பாரம்பரிய முறைப்படி நோய் கிருமிகளை அழிக்கும் நூதன முயற்சியில் ,பாரத மாதா நற்பணி அறக்கட்டளையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சார்பாக கொரானா நோய் தொற்றை அகற்றும் பொருட்டு உடையாம்பாளையம் பகுதியில் உள்ள ஓவ்வொரு விதிகளிலிலும் வேப்பிலை, மஞ்சள், மாட்டுச்சாணம், கோமயம் மற்றும் சித்த மருந்துகள் கலந்து நீரை தெளித்தபடி வேப்பிலை தோரணம் கட்டி வருகின்றனர்.
இது குறித்து அறக்கட்டளையின் தலைவர் கௌரி சங்கர் கூறுகையில்,
நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் பேசப்படும் நமது தமிழக பாரம்பரிய சித்த முறையை பயன்படுத்தி, கிருமிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.இதே போல பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.இதில் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் இளங்கோ ராஜேஷ் டார்வின் பிரகாஷ் சுரேஷ் பிரவீன் மெய்யரசன் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.