July 2, 2018
தண்டோரா குழு
கோவையில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் “இந்தியா இந்தியர் அனைவருக்கும்”என்ற தலைப்பில் இந்தியா டுடே என்ற நாடகம் நடைபெற்றது.இதன் பின் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களான தலித்,ஆதிவாசி,முஸ்லீம் மற்றும் கிருத்துவ மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்கு அன்றாட போராட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் பெரு நிறுவன முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுவதால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும்,இந்த அபாய சூழலை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து இந்நிலையை மாற்றியமைக்க கூறி இக்கூட்டமானது நடைபெற்றது.இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.