• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வெறிச்சோடிய முக்கிய வணிக வளாகங்கள்

March 16, 2020

கோவையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய தனியார் வணிக வளாகங்கள் மற்றும் ஆரம்ப பள்ளிகள் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள திரையரங்குகள் வரும் 31 ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்றும் துவக்கப் பள்ளிகள், வருகிற 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும்
எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (மால்) வருகிற 31ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து கோவையில் உள்ள முக்கிய வணிக வளாகங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியபடி காணப்படுகிறது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உட்பட்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாக புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்வின் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கேரள எல்லையோர பகுதிகளில் உள்ள சி சென்டர் திரையரங்குகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க