May 11, 2018
தண்டோரா குழு
கோவையில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் பாய்,தலையணை, பாத்திரங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை வெரைட்டிஹால் பகுதியில் 500க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.இந்நிலையில் புறம்போக்கு நிலங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றுமாறு அப்பகுதி மக்களிடம் தெரிவித்தோடு,வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கான டோக்கன்களை வழங்கி உள்ளது.அதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இது வரை டோக்கன் வழங்கவில்லை.அதே போல் பணம் பெற்று கொண்டு மற்ற நபர்களுக்கு வீட்டுமனைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தலையணை,பாய்,பாத்திரங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.