• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீட்டில் வைத்து மது விற்ற பெண் கைது

May 21, 2020

கோவை வெள்ளலூர் அருகே வீட்டில் வைத்து மது பாட்டில் விற்ற பெண்ணை கண்டித்து அப்பகுதி பெண்கள் வீட்டை முற்றுகையிட்ட நிலையில், மது விற்பனை செய்த பெண்ணை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை வெள்ளலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்ற பெண் தனது கணவர், மாமியாருடன் சேர்ந்த வீட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாகக் கூறி அப்பகுதி பெண்கள் மாசிலாமணியின் வீட்டை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீஸார் மாசிலாமணியை கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில் மாசிலாமணியின் மாமியாரை சுற்றிவளைத்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது கொரோனா ஊரடங்கு நேரத்தில் 24 மணி நேரமும் மாசிலாமணி வீட்டில் மது விற்பனை செய்ததாகவும் இதனால் எப்போது ஆண்கள் இப்பகுதியில் குடிபோதையில் சாலையில் சுற்றியதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது டாஸ்மாக் கடைகள் திறந்த நிலையில் இரவில் இருந்து காலை வரை இங்கு மது விற்பனை நடந்து வருவதாக கூறினார்.

மேலும் போலீஸிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, கைது செய்து மீண்டும் விடுவார்கள், அவர்கள் தொடர்ந்து மது விற்பனை செய்வதால் எங்கள் வீட்டு ஆண்கள் குடிவித்து தகராறு செய்வதாகவும், வெள்ளலூர் மட்டுமின்றி போத்தனூர், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மது வாங்கி அதே பகுதியில் அமர்ந்து குடிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க