• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் வழக்கு பதிவு செய்ய ஆட்சியர் உத்திரவு

June 18, 2020 தண்டோரா குழு

கோவையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் வழக்கு பதிவு செய்ய ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுடனான
ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை முருகன், மாநகர காவல் துணை
ஆணையர் பாலாஜி சரவணன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்
ரமேஷ்குமார், இ.எஸ்.ஐ மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாசு, இணை இயக்குநர் கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், உட்பட அரசு
அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மே மாதம் இறுதி வரை கொரோனா பாதிப்பு முழுமையாக இல்லாமல் இருந்தது. ஜுன் முதல் வாரம் முதல் விமானம், இரயில் மற்றும் சாலை மார்க்கமாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் தொற்று வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அலுவலர்களும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முதன்மை பணியாக அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள், வெளிமாநிலங்களிருந்து
விமானங்கள் மூலம் வருகை தருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படுவதுடன் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,
சாலை வழியாக வெளிமாநிலங்கள் மற்றும் சென்னை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு சோதனை சாவடிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகின்றது.இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு, வெளி நாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் மூலமாக இதுவரை
187 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜுன் மாதத்தில் மட்டும் 41 பேருக்கு தொற்று
கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 17,938 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் எவ்வித காரணங்களுக்காவும் வெளியில் வரக்கூடாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சிலர் அறிவுரைகளை மீறி
வெளியில் நடமாடுவதாக தகவல் வரப்பெருகிறது. அவ்வாறு
வெளிவருபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து எந்த
முன்னறிவிப்பும், அனுமதியும் இன்றி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு
வருவோர் குறித்து அருகில் வசிப்பவர்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவிக்க
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ள
பகுதிகளில் வருவாய் துறை, மாநகராட்சி மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் 100 சதவீதம்
கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் போதும், அன்றாட
பணிகளை மேற்கொள்ளும்போதும் சமூக இடைவெளியை தவறாது பின்பற்ற வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் உதவி ஆணையாளர்கள் கவனத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டு முகக்கவசம் அணியாமல் வெளிய வருபவர்களுக்கு அபாரதம் விதிக்கவேண்டும். இதுவரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே
கண்டறியப்பட்டவர்களிடம் ரூ.9.55 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் மளிகைக் கடைகளில் அதிகப்படியான மக்கள் கூடுவதை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும் எனவும், அறிவுரைகளை மீறி கூட்டம் கூடும் நிலையில் இவைகளை மூடுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் மாவட்ட
ஆட்சித்தலைவர் எச்சரித்தார்.

மேலும்,கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் அனுமதி பெற்று வெளிநாடு,வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வருகை
தருகின்றவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.மேலும், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய வாகனங்களைத் தீவிரமாக கண்காணிக்கவேண்டும்.
சோதனை சாவடிகளில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சிதுறை, ஆகிய துறைகள் குழுவாக ஒருங்கிணைந்து
கண்காணிப்பு பணியினை தொடர்ந்து 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டும்.மேலும், இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களை வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள்
கண்காணித்து வாகனங்களை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், போலியான இ-பாஸ் தயாரிக்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடை உரிமையாளர் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை
எடுக்கப்படும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போதும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க பொதுமக்கள்
முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க