• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டிற்குள் கெட்ட ஆவி உள்ளதாக பெண்ணிடம் கைவரிசை !

November 25, 2023 தண்டோரா குழு

கோவையில் வீட்டிற்குள் கெட்ட ஆவி உள்ளதாக பெண்ணிடம் தங்க மோதிரத்தை பறித்து சென்ற போலி ஆசாமி திருடனை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த முரளி மனோகரின் மனைவி பிரகதீஸ்வரி,(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது காவி உடைகளை அணிந்தபடி போலி ஆசாமி ஒருவர் வீட்டின் கேட்டின் முன்பு நின்று வீட்டிற்குள் கெட்ட ஆவி உள்ளது அதை விரட்டவில்லை என்றால் உன் கணவர் இறந்து விடுவார் என சத்தம் போட்டுள்ளார்.

இதை கேட்ட அந்த பெண் வெளியே பதறி அடித்து கொண்டு வந்து அந்த போலி ஆசாமியிடம் பேசி உள்ளார். இதனையடுத்து சுய நினைவை இழந்து அந்த பெண் தான் அணிந்திருந்த 2தங்க மோதிரங்களை கழட்டி ஆசாமியிடம் கொடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த பெண்மணிக்கு நினைவுகள் திரும்பவே தன் மோதிரத்தை தன்னை அறியாமலேயே கழட்டி கொடுத்தது தெரியவந்துள்ளது.இது குறித்து அவரது கணவரிடம் அந்த பெண் தெரிவிக்கவே கோவை பீளமேடு காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் வடிவேலு,மயில்சாமி இருவரும் இணைந்து நடித்துள்ள மந்திரவாத நகைச்சுவை போல் இந்த செயல் நடந்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க