• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

January 16, 2021 தண்டோரா குழு

சரவணம்பட்டி ராகவா நகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் மகன் விக்னேஷ். இவர் தனது மனைவி மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றார். இவர் பொங்கல் பண்டிகையை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவுக்காரர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் முன் கதவை உடைத்து உள்ளறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 25 பவன் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். காலையில் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் முன் கதவு உடைந்து இருப்பதை கண்டு சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்தனர்.

இதையடுத்து,வீட்டின் உரிமையாளர் விக்னேஷ் க்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அவர் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்ததற்கு பின்பு வீட்டிற்குள் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க