• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீடு புகுந்து சிறுமி பாலியல் பலாத்காரம் – வங்கி ஊழியர் கைது

January 2, 2020

கோவையில் வீடு புகுந்து 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வங்கி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை செல்வபுரம் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்
அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி உள்ளார்.

இதற்கிடையில், அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் செல்வபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். அப்புகாரின் அடிப்படையில்
போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான ராம்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க