December 21, 2020
தண்டோரா குழு
கோயம்புத்தூர் முழுவதும் ‘வீடற்ற 35 மக்களுக்கு போர்வைகளை BLOOD FOR LIFE ROTARACT CLUB OF COIMBATORE UNIQUE ஆகிய அமைப்பு இணைந்து வழங்கியுள்ளன.
கோவையில் தற்போது டிசம்பர் மாதம் கடும் பணி பெய்து வருகிறது. ஆனால் வீடற்றொர் சாலையோரம் கடும் குளிரில் கழிவுத் துணிகளைப் பயன்படுத்தி உடலை மூடுவதையும் காணலாம். இந்த குளிர்காலக் காற்றைத் தாங்க அட்டைப் பெட்டியை வைத்தும் உறங்கி வருகிறார்கள்.அமைதியான தூக்கம் இல்லாததால் பலருக்கு பல பருவகால நோய்கள் வருவதையும் தடுக்கும் முயற்சியாக
கோவையில் BLOOD FOR LIFE, ROTARACT CLUB OF COIMBATORE UNIQUE இணைந்து டிசம்பர் மாத குளிரை தங்குவதற்காக கோயம்புத்தூர் முழுவதும் ‘வீடற்ற 35 மக்களுக்கு போர்வைகளை வழங்கியுள்ளது.
கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.
ஆர்.டி.ஆர். மோனிகா,ஆர்.டி.ஆர் அக்ஷயா மற்றும் ஆர்.டி.ஆர்.ரம்யா ஆகியோர் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர். இதில் ரோட்ராக்ட் இன் தன்னார்வலர்கள் கங்காதரன், கலையரசி, ஆனந்தராஜ், ரிஷ்வந்த் ஆதித்யா மற்றும் அபிஷேக் ஆகியோர்பங்கேற்றனர். கோவையில் இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையில் மாஸ்டர் நிகில் தொடங்கிய அமைப்பு தான் BLOOD FOR LIFE ஆகும்.