• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விவசாயிகள் டவர் லைன் மீது ஏறி போராட்டம்

June 11, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் செம்மாண்டம் பாளையம் , கருமத்தம்பட்டி பகுதிகளில் உயர்ந்த கோபுரம் அமைக்க நில அளவைத் பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டவர் லைன் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு மின்சாரம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டம் புகளூர் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. உயர் மின் கோபுரங்கள் மூலம் மின்சாரத்தை விளைநிலங்கள் வழியாக கொண்டு வந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கோவை ,திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கிடையில்,உயர் மின் கோபுரங்கள் விளை நிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நில அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நில அளவீடு பணிகளை அவர்கள் நிறுவனம் மீண்டும் துவங்கியிருக்கிறது. இன்று காலை கோவை மாவட்டம் சோமனூரை அடுத்த செம்மாண்டம் பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நில அளவீடு பணியை அதிகாரிகள் நடத்தினர் .அதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் போலீசார் துணையுடன் நில அளவிற்கு பணியானது நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் பவர் கிரிட் அதிகாரிகள் காவல்துறையினருடன் துணையுடன் இந்த பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதனிடையே கருமத்தம்பட்டி பகுதியில் ஏ ஆர் சி பள்ளி அருகே நில அளவீடு பணி மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து விவசாயிகளை குண்டுக்கட்டாக காவல்துறையினர் தூக்கிச் சென்று கைது செய்தனர் இதேபோல செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் நில அளவீடு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அங்குள்ள டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது நில அளவீடு பணியை திரும்பப் பெறவில்லை எனில் மேலிருந்து குதித்து விடப் போவதாகவும் மிரட்டினர் இதனைத் தொடர்ந்து டவரில் ஏறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயிகளை பொருத்தவரை இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை எனவும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கபடுவதற்கு பதிலாக, புதை வழித்தடமாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் எனவும் இதன் மூலம் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும், தங்களை நிலத்தின் மதிப்பும் என்றும் குறையாது என்பதால் மாற்று திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க