February 20, 2021
தண்டோரா குழு
கோவை வடவள்ளியில் உள்ள சில்லறை விற்பனை மீன் கடையில் இன்று 30 கிலோ எடை கொண்ட ஐந்தரை அடி வஞ்சரம் மீன் விற்பனைக்கு வந்தது.
கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் மீன் விற்பனை கடையில் 30 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன் வரத்தாகியிருந்தது. வழக்கமாக 18 கிலோ வரை ஒரே மீனாக வர்த்து வந்துள்ளதாக தெரிவித்த அந்த மீன் கடைகாரர் 30 கிலோ வஞ்சரம் மீன் வரத்தாகியிருப்பது இதுவே எங்கள் கடையில் முதல் முறை என்றார்.
மிகப்பெரிய மீனை காண அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வருகை புரிந்த நிலையில் ,அந்த மீனை ஒரு வாடிக்கையாளர் ஆர்வமுடன் வாங்கி சென்றார். மொத்த மீனையும் வாங்கினால் கிலோ 550 க்கு விற்பனை செய்வோம் என கடைக்காரர் தெரிவித்திருந்தார்.