July 3, 2018
தண்டோரா குழு
கோவை விமான நிலையத்தின் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது எர்ணாகுளத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற பயணி கொண்டு வந்த உருளை வடிவில் உலோகம் ஓன்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.கைப்பற்றப்பட்ட அந்த உலகத்தை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமல்ராஜை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த உருளையை ஆய்வு செய்த போது,உருளையின் உட்பகுதியில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அமல்ராஜை கைது செய்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும்,கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 15 லட்சம் ருபாய் எனவும்,இது 3.6 கிலோ எடையில் இருந்ததாகவும் வருவாய் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.