• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விமானத்தின் பெட்ரோல் டேங் கழண்டு விழுந்து வெடித்ததால் பரபரப்பு

July 2, 2019

விமான படை வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்போது விமானத்தின் பெட்ரோல் டேங் கழண்டு விழுந்து வெடித்தத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை சூலூர் பகுதியில் இந்திய விமான படை பயிற்சி தளமானது அமைந்துள்ளது இங்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்று காலை மிக்21 என்ற போர் விமானத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போது அதிலிருந்த 1200லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங் கழண்டு கோவை இருகூர் பகுதியில் உள்ள விவசாயி நிலத்தில் விழுந்து வெடித்தது.

விமானத்தின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். விவசாயி நிலத்தில் விழுந்ததால் எவ்வித உயிர் சேதம் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் 2 வீரர்கள் பயிற்சி பெற்ற போது , ஒரு பெட்ரோல் டேங்கில் தீப்பற்றியதால், பாதுகாப்பு கருதி அதனை கழற்றி கீழே விட்டுள்ளனர் என விமான பயிற்சி துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க