• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விபத்து வழக்கில் இழப்பீடு தொகை வழங்காத தனியார் பேருந்து ஜப்தி

January 31, 2020

கோவையில் விபத்து வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி 75 இலட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மகள் கீதாஞ்சலி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம் காந்திபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கீதாஞ்சலி மீது, எஸ் 16 என்ற தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதிலா கீதாஞ்சலியின் இடது கை சேதமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து இழப்பீடு கேட்டு, ஜனார்த்தனன் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் வட்டியுடன் 75 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இழப்பீடு வழங்காததால் ஜனார்த்தனன், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதில் இழப்பீடு வழங்ககாததால் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் கோவை ரயில் நிலையம் பகுதிக்கு வந்த போது, அப்பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

மேலும் படிக்க