August 2, 2018
தண்டோரா குழு
கோவை சுந்தராபுரத்தில் நேற்று நடந்த கோர விபத்தை தொடர்ந்து இன்று போக்குவரத்து காவல் துறையினர் அந்த வழியில் வேகமாக வரும் வாகனங்களை, கட்டுப்படுத்த சாலை தடுப்பு வைத்தும், வேக கட்டுப்பாட்டு கருவி பயன்படுத்தியும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியில் நேற்று தாறுமாறாக வந்த ஆடி கார்,சாலையில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குகாரை ஓட்டி வந்த ஓட்டுனர் குடிபோதையில் வந்ததாகவும், அதி வேகமாக வந்ததுமே காரணமாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று போக்குவரத்து காவல் துறையினர் அப்பகுதியில் வேகத்தடுப்புகளை அமைத்து வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் வேக கட்டுப்பாட்டு கருவி மூலமாகவும் வாகனங்கள் வருவதை கண்காணித்து வருகின்றனர். அதைபோல் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கவும் , வாகன ஒட்டிகளிடம் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.