January 15, 2021
தண்டோரா குழு
கோவை ரத்தினபுரி இடையப்பகவுண்டர் வீதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவருக்கு வயது 26. இவர் இன்று தனது மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூர் காமராஜபுரம் பகுதியில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் சரிந்து விழுந்தது. அதில் தினேஷ் குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.