November 6, 2020
தண்டோரா குழு
கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆர்.எஸ்.எஸ்.இளைஞரின் உடல் உறுப்புக்கள் அவரின் விருப்பப்படியே தானம் செய்யப்பட்டது.
கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் வைதீஸ்வரன். கோபால் மற்றும் விமலாதேவி தம்பதியரின் மகனான இவர்,அமிர்த வித்யாலயம் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த வந்தார்.இந்த நிலையில் கடந்த வாரம் கோவில்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து வைத்தீஸ்வரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க தாய் தந்தையரால் முடிவு செய்யப்பட்டு கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு , அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
இது குறித்து அவரது தந்தை கூறுகையில்,
மூளைச்சாவு ஏற்பட்ட தனது மகன் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், இவர் சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து எட்டிமடை கிராம வளர்ச்சிக்காகவும் ஆன்மீக பணிகளிலும் பெருமளவில் ஈடுபட்டு வந்ததால் உடல் உறுப்பு தானம் செய்ய அவரே விரும்பி இருந்த்தாக கண்ணீர் மல்க கூறினார்.மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்பு தானம் அளித்த வைத்தீஸ்வரன் ஆர்எஸ்எஸ் ஸின் எட்டிமடை மண்டல் உடற்பயிற்சி பொறுப்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.