June 13, 2021
தண்டோரா குழு
கோவையில் விஜய் மக்கள் இயக்க மேற்கு நகர மாணவரணி சார்பாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்புகள் வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட மாணவரணி சார்பாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை மாணவரணியினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டம் மற்றும் சமூக பணிகளை செய்ய துவங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்க மேற்கு நகர மாணவரணி சார்பாக அதன் தலைவர் விவேக் சந்திரன் ஏற்பாட்டில்,மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.தெலுங்குபாளையம் பகுதியில் நடைபெற்ற இதில் கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி அந்த பகுதி பொதுமக்களுக்கு முன்னதாக டோக்கன் விநியோகிகப்பட்டு, சமூக விலகலை பின்பற்றி காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.
இதில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவரணி தலைவர் பாபு கூறுகையில்,
தளபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் படி, இது போன்று தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.இதில் மாவட்ட நிர்வாகிகள் தேன்குமார்,செல்வம், செந்தில்,ஆஷிக் முகம்மது,மாரி ராஜ்,விஷ்னு கைலாஷ் மற்றும் மேற்கு நகர மாணவரணி நிர்வாகிகள் சூரிய பிரகாஷ், சுரேஷ் அபிஷேக் மகேஷ் குமரேஷ், சந்தோஷ், விக்கி, லட்சு மற்றும் தெலுங்குபாளையம் பகுதி நிர்வாகிகள் அஜித், சபரி, சச்சின் உட்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.