February 17, 2020
கோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ். இவர் தற்பொழுது கோவை குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பழய இரும்புகளை மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றார்.
இந்நிலையில் 15 ஆம் தேதி சத்திய மங்களத்தில் இரும்பு ஸ்க்ராப்களை பார்த்துவருவதாக கூறி சென்றவர் வீடுதிரும்பவில்லை, இந்நிலையில் நேற்று CAA விற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மேட்டுப்பாளையம் சாலை டிவிஸ் நகர்பகுதியில் பொதுக்கூட்டம் நடக்க இருந்ததால் அந்தபகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை சாய்பாபா காலணி போலீசார் எடுக்கசொல்லி அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது. ஒரு வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் ஒருவர் ஓட்டுனர் இருக்கையில் மூக்கில் இரத்தம் வழிந்தபடி இறந்த நிலையில் இருந்த்தை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவர் எப்பொழுது காரில் இங்கு வந்தார் இவருடன் வேருயாராவது வந்தார்களா. இயற்கையான முறையில் இறந்தாரா, அல்லது தொழில்போட்டியால் கொலைசெய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.