March 20, 2018
தண்டோரா குழு
கோவையில் பல்வேறு பகுதியில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதால் பாரம்பரிய வாரச்சந்தை கடை வைத்து உள்ளவர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர் இதனை தடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(மார்ச் 20)மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்திற்கு உட்பட பகுதியில் நூற்றாண்டு கால பாரம்பரியமான வாரச்சந்தை அரசு பேரூராட்சி நகராட்சி சார்பில் நடை பெற்று வருகிறது.வியாபரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு செயல் பட்டு வரும் நிலையில் வியாபாரிகள் எதிராக சந்தை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை சீர் குலைக்கும் வகையில் வியாபாரிகள் நடத்தும் கடை அருகே தற்காலிமாக கடை அமைத்து வாரச்சந்தை என்று செயல்படுவது வணிகர்கள் வியாபாரத்தை பாதிப்பு அடைய செய்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர் இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர்.