March 22, 2021
தண்டோரா குழு
டெல்லியை சேர்ந்த மகளிர் குழுவினர் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாக வட மாநிலத்தவர் வசிக்கும் பகுதிகளில் ஹிந்தியில் கோசமிட்டபடி தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
கோவை மாவட்டம் காந்தி பார்க், சுக்ரவார் பேட்டை பகுதிகளில் வடமாநில மக்கள், அளவுக்கு அதிகமானோர் வசித்து, வருகின்றனர்,பல்வேறு பிரிவுகளான, மார்வாடி, போஜ்புரி,சவுராஷ்டிரா,ராஜ்கூத்,என பல்வேறு அமைப்புகளை சார்ந்த,வட மாநில மக்கள் பலரும் பலவிதமான தொழில்கள் செய்து வரும் நிலையில்,வட மாநிலங்களை சேர்ந்த இளம் பெண்கள் தங்களுக்கென தனி கூட்டணி அமைத்து அமைப்பின்சார்பில், பாரதிய ஜனதா கட்சியை ஆதிரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வருகின்ற வானதி சீனிவாசனை ஆதரித்தும்,அவருக்காகவும் வடமாநில பெண்கள் அமைப்பின் சார்பில் அந்த பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும், வட மாநில மக்களின் மேளம் அடித்து ஊர்வலமாக சென்று ஹிந்தியில் கோசமிட்டபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வட மாநில தொழிலாளர்கள் இலட்சக்கணக்கான மக்கள் இந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர் இவர்களையெல்லாம் ஒன்றிணைத்து ஒவ்வொரு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது அனைத்து சங்க நிர்வாகிகளையும் சந்தித்து, பெண்கள் அனைவரும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆதரிப்போம் என பெண்கள் கூட்டணி அமைப்பினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.