• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாசிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

July 19, 2019 தண்டோரா குழு

கோவையில் வாசிப்பு தினத்தை ஒட்டி பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தில் பள்ளி மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் , ஆண்டுதோறும் ஜூன் 19 – ம் தேதி தேசிய வாசிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . இதையொட்டி மாவட்ட மைய நூலகம் சார்பில் ,கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட நூலக ஆணைக் குழு வளாகத்திலிருந்து வாசிப்பு விழிப்புணர்வு வாகனம் இயக்கப்பட்டது. இந்த வாகனத்தில் வாசிப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் , நூலகருமான விஜயன் கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம,ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வாசிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் , கோவை குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாசிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது.தமிழக அரசு பொது நூலகத் துறை , ரோட்டரி கிளப் ஆப் கோவைப்புதூர் இணைந்து நடத்திய இதில், பள்ளி மாணவ,மாணவிகளிடம் வாசிப்பதன் முக்கியத் துவத்தையும், அதனால் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து எடுத்து கூறினர்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி உறுப்பினர்கள் ,மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க