March 8, 2021
தண்டோரா குழு
கோவையில் தேர்தல் பணியில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக மொத்தம் 22 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு வரும் 13ம் தேதி முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடக்க உள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
‘‘வரும் 13 ம் தேதி பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அத்தொகுதிகளுக்குட்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணி மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பெட்டிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த முதல் கட்ட பயிற்சி அளிக்கப்படும்.
பின்னர் 26ம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சியும் தபால் வாக்குகளுக்கான படிவமும் வழங்கப்படும். அதன் பின்னர் மூன்றாம் கட்ட பயிற்சியின் போது தபால் வாக்குகள் அவர்களிடம் இருந்து பெறப்படும்,” என்றனர்.