December 11, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்பட பணிகளுக்காக நாளையும், நாளை மறுநாளும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 18 வயதை பூர்த்தியடைந்த நபர்கள் பெயர்களை இணைப்பது, பெயர் நீக்கம், பதிவுகளில் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்பட திருத்தங்களை மேற்கொள்ளலாம். இது தவிர வாக்குப்பதிவு மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம், கோவை மாநகராட்சி உதவி ஆணையர் (மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம்), பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் டிசம்பர் 15 ஆம் தேதி வரையில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்கலாம்.