April 6, 2021
தண்டோரா குழு
கோவை கவுண்டபாளையம் சட்டமன்ற தொகுதி கருப்பராயன் பாளையத்தை சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். இவர் 1916ம் ஆண்டு ஜீன் 1ம் தேதி பிறந்தவர். தற்போது அவரது வயது 105. விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். இவர் எஸ்.எஸ். குளம் ஒன்றிய குளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார்.
வாக்களித்த பின் அவர் பேசுகையில்,
‘‘ காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் நான் பார்த்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களை தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்,’’ என்றார். தள்ளாத வயதிலும் தனது வீட்டிலிருந்து 2000 அடி தூரம் நடந்து சென்று, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மாரப்ப கவுண்டர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.