• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வாக்களித்த விபரத்தினை சரிபார்க்கும் இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு

February 9, 2019

கோவையில் மின்னணு வாக்குப் பதிவு மற்றும் வாக்களித்த விபரத்தினை சரிபார்க்கும் இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சார குழுவை பொறுப்பு மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி,வரும் மக்களவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்படவுள்ள , மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்த விபரத்தினை சரிபார்க்கும் இயந்திரங்கள் பயன்பாடு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு 60 பிரச்சார வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இன்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை கோவை மாவட்ட பொறுப்பு ஆட்சியர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில் குமார் ரத்தினம் மறறும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த வாகனத்தில் 6 பேர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடையே இந்த இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வை இன்று துவங்கி 5 நாட்களுக்கு ஏற்படுத்த உள்ளனர்.

மேலும் படிக்க