• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

October 4, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட இடிகரை பகுதியை சேர்ந்த மருது மகன் குமார் என்கிற நல்ல குமார்(20) மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கபாண்டியன் என்கிற சுபாஷ் (20) ஆகியோர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மேற்படி நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில்,கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி வழிப்பறி வழக்கு குற்றவாளிகளான குமார் @நல்ல குமார்(20) மற்றும் தங்கபாண்டியன் @சுபாஷ் (20) ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 53 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க