• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு

November 17, 2021 தண்டோரா குழு

கோவை வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க அரங்கில் இன்று நடைபெற்றது. சங்க தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கோவையில் உள்ள இன்றியமையாத பொருட்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்ற வழக்கறிஞர்ஆஜராகாததால், விசாரணைக்கு ஆஜரான குற்றம் சாட்டப்பட்ட நபரை, சிறையில் அடைத்த சம்பவத்தை கண்டித்து இன்று (புதன்கிழமை) முதல் 20-ம் தேதி வரை 4 நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற கோருதல், கோவை நீதிமன்ற வளாக அனைத்து நுழைவு வாயில்களை திறக்க கோருதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க