December 8, 2020
தண்டோரா குழு
கோவையில் அனைத்து கடைகள் , காய்கறி சந்தை, மீன் மார்க்கெட் வழக்கம் போல் செய்பட்டு வருகிறது.
மத்திய அரசு அன்மையில் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அரியானா, பஞ்சாப், மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 26ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் என முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கோவை டவுன்ஹால், உக்கடம், சாய்பாபா காலனி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், காய்கறி சந்தைகள், பூ மற்றும் மீன் மார்க்கெட் எல்லாம் வழங்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் போலீஸார் ரோந்து பணி செல்கின்றனர். கடை உரிமையாளர்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.