• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வளர்ப்பு ஆடுகளை விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

October 14, 2019 தண்டோரா குழு

கோவையில் வளர்ப்பு ஆடுகளை விஷம் வைத்து கொன்றது மட்டுமின்றி, தன்னையும் விஷம் வைத்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு அளித்தார்.

கோவை வடவள்ளி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக ஆடு மேய்த்து பிளைப்பு நடத்தி வருபவர் புஷ்பராஜ். இவருக்கும் இவரது வீட்டின் அருகில் வசித்து வரும், பாண்டியன், பழனிச்சாமி, செந்தில், என்பவருக்கும் ஆடு மேய்ப்பது குறித்தான சிறு சிறு மனஸ்தாபங்கள் அடிக்கடி ஏற்பட்டு, சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளது. ஒரு காலக் கட்டத்தில் அவர்கள் புஷ்பராஜின் வாயில்லா ஜீவன்களான ஆடுகளை விஷம் வைத்து கொன்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், தனக்கு வழக்கு பதிவினை பதிவு செய்ததற்கான முதல் தகவல் அறிக்கை பதிவு சான்றிதழினை வடவள்ளி காவல் துறையினர் தர மறுத்து வருகின்றனர். இதனால் இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புஷ்பராஜ் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பாக தீடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறுது பரபரப்பு ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க அதற்கான அதிகாரிகளை அணுகுமாறு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க