• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வலிப்பு நோய்க்கு கம்பி கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

September 19, 2022 தண்டோரா குழு

வலிப்பு வந்த போது கையில் கொடுக்கப்பட்ட கம்பி கழுத்தில் குத்திய நிலையில் கடந்த 22.08.2022 அன்று 28 – வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கழுத்தின் முன் பகுதியில் இரும்பிலான கம்பி ஒன்று குத்திய நிலையில் கை , கால்களின் இயக்கம் பாதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த பார்த்ததில் கழுத்தின் வலது பக்கம் பாய்ந்த கம்பியானது ழூச்சுக்குழாய் , உணவுக்குழாய் மற்றும் இரத்தநாளங்களின் மிக அருகில் பாய்ந்து தண்டுவட எலும்பினை துளைத்து தண்டுவடத்தில் குத்தியிருப்பது தெரியவந்தது.

மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆலோசனைப்படி நரம்பியல் அறுவை சிகிச்சை , இதய அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்து கழுத்தில் பாய்ந்த கம்பியை நோயாளிக்கு எந்தவித பாதிப்புமின்றி அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளி கை , கால்கள் இயக்கம் சீறடைந்து இன்று வீடு திரும்பினார். இந்த சிக்கலான அறவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவக் குழுவினரை மருத்துவமனை முதல்வர் வெகுவாக பாராட்டினார்.

மேலும் படிக்க